2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் முதல் தடவையாக ஆவணத்திரைப்பட விழா

Kogilavani   / 2013 டிசெம்பர் 16 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழில் முதல் தடவையாக ஐரோப்பிய நாடுகளின் ஆவணத் திரைப்பட விழா   கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழா யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன.

2013 ஆம் ஆண்டில் சர்வதேச விருதுகளைப் பெற்ற திரைப்படங்களே இவ்வாறு காண்பிக்கப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரஷ்யா, ஜேர்மனி, சுவிஸ்லாந்து, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின்  6 படங்கள் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கையில் வருடா வருடம்  ஆவணத் திரைப்படம்  விழா நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 6 ஆவது தடவையாக இலங்கை தேசியத் திரைப்பட கூட்டுதாபனத்தில் நவம்பர் 29 ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 6 ஆம் திகதி வரை 17 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .