2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாரம்பரிய பொங்கல் விழா

Kogilavani   / 2014 ஜனவரி 10 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பாரம்பரிய பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேராசிரியர் சி.மௌனகுரு, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் கிறிஸ்டி ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

அதிதிகள்; பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் கல்லடி பேச்சியம்மன் ஆலயத்திலிருந்து கலை, கலாசார நடனங்களுடன் ஊர்வலமாக நிறுவகம் வரை அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது, சூரிய பகவானுக்கு பூஜை செய்து பொங்கல் பானையை ஏற்றியதோடு கலை கலாசார உள்ளக நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
கோலம் போடுதல், கயிறு இழுத்தல், மாலை கட்டுதல் போன்ற வெளியக போட்டிகளும் இதன்போது இடம்பெற்றன. 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .