2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் ஆண்டு நிறைவு விழா

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 16 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 16ஆவது ஆண்டு நிறைவும் 'மாருதம்' சஞ்சிகை வெளியீடும் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கலாநிதி அகளங்கன் தலைமையில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் க.அருள்வேல், வவுனியா பிரதேச செயலளார் கா.உதயராசா, வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட், வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வவுனியா நகரசபை செயலாளர் க.சத்தியசீலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

'மாருதம்' சஞ்சிகையின் முதல் பிரதியை அருட் கலைவாரிதி கலாபூஷணம் ஸ்தபதி சு.சண்முகவடிவேல் பெற்றுக்கொண்டார். அறிமுகவுரையை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் அ.சத்தியானந்தன் ஆற்றினார்.

இதனையடுத்து முருகேசு நந்தகுமாரின் 'இருட்டு மனிதர்கள்' நாவல் வெளியீட்டில் கௌரவப் பிரதியை பி.ஏ.சி.ஆனந்தராசா குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.  அறிமுகவுரையை கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உப தலைவர் ந.பார்தீபன் வழங்கினார்.
இதனையடுத்து பேராசிரியர் சி. மௌனகுரு நேர்காணல்கள் நூலின் தொகுப்பினை கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் வழங்க அறிமுகவுரையினை கவிஞர் சோ.பத்மநாதன் வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .