2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  சிரேஷ்ட  விரிவுரையாளர்களான  கலாநிதி சாமித்தம்பி செந்தில்நாதன், அந்தோனிப்பிள்ளை அன்ரன் அருள்ராஜா  ஆகியோரின் நெற்வேர்க் அனலைஸிஸ்,  மற்றும் டிரான்ஸ்போற்ரேசன் ரெக்னிக் என்ற ஆங்கில நூல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன.

மட்டக்களப்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் ஏடு அமைப்பின்; தலைவர் கே.அருளானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பப்பிரிவுப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ல.கங்கேஸ்வரன், மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார், வவுணதீவுப் பிரதேச செயலாளர் வி.தவராஜா,  கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நூல்களின் முதல் பிரதிகளை மட்டக்களப்பு கல்வி வலய ஆரம்பப்பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ல.கங்கேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .