2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'சிறுவருக்கு மகாபாரதம்' நூல் வெளியீடு

Kogilavani   / 2014 ஜனவரி 28 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அமரர் கலாபூசனம், தமிழ்மணி திமிலை மகாலிங்கம் எழுதிய 'சிறுவருக்கு மகாபாரதம்' நூல் வெளியீடு திங்கட்கிழமை (27) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை உத்தியோகத்தர் சி.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் கலந்துகொண்டார்.

இதன்போது திமிலை மகாலிங்கத்தின் பாரியாரினால் முதல் பிரதி முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் செல்லத்தம்பி எதிர்மன்னசிங்கத்துக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பதிப்பாசிரியர் உரையினை திமிலை மகாலிங்கத்தின்; மகன் நிகழ்த்தியதுடன் நூல் நயவுரையினை புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் ஆசிரியை திருமதி அமுதா வரதராஜன் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .