2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இருநூல்களின் அறிமுக விழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


 'வாய்க்கால் கலை'  இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மீராபாரதி எழுதிய பிரக்ஞை மற்றும் மரணம் இழப்பு  மலர்தல், ஆகிய  இரு நூல்களின் அறிமுக விழா எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கவிஞர் அரசையூர் மேராவின் தலைமையில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மனநல வைத்தியர் த.கடம்பநாதன், கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவி திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ இரஜரட்டை பல்கலைக்கழக உப பதிவாளர் மன்சூர் ஏ.காதர், பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் கதை சொல்லிச் செயற்பாட்டாளர் அருள்.கருணா ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு ஆய்வாளர்கள், இலக்கிய படைப்பாளர்கள், வாசகர்கள் சமூக நலன்விரும்பிகள் என பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு நூல்களும் ஏற்கனவே இலண்டன் மற்றும் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மட்டக்களப்பில் நாளை மறுதினம் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன.

சமூக ஆய்வு சார்ந்த மேற்படி இரு நூல்களும் இன்றைய சூழலில் மிக முக்கியமான வரவாகப் பார்க்கப் பட்டுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X