2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

இளவாலை சென் ஜேம்ஸ் தேவாலய எழுச்சியகத்தின் வருடாந்த கலை விழா

Super User   / 2014 மார்ச் 16 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்

இளவாலை சென் ஜேம்ஸ் தேவாலயத்தில் இயங்கும் எழுச்சியகத்தின் வருடாந்த கலை விழா சனிக்கிழமை (15) நடைபெற்றது. 

இளவாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.ஜே.கியு.ஜெயரஞ்சன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் வலையக் கல்விப் பணிப்பாளர் எஸ். சந்திரராசாவும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசனும் கலந்து கொண்டனர். 

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த கலை நிகழ்வுகளில் பெரும்பங்கு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்குவதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

2010 ஆம் ஆண்டில் இளவாலையில் ஆரம்பிக்கப்பட்ட எழுச்சியகம் தற்போது 655 மாணவர்களுக்கு ஆங்கிலம், சங்கீதம், கணினி, கணிதம் ஆகிய துறைகளைப் போதிக்கும் நிறுவனமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .