Thipaan / 2015 மார்ச் 14 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை ஒலுவில் மின்னல் வெளியீட்டகத்தினால் மாதாந்தம் வெளியிடப்படும் 'கீறல்' சஞ்சிகை வெளியீட்டு விழா அதன் தலைவர் இஸட்.எம். நிழாம் (நழீமி) தலைமையில் மின்னல் வெளியீட்டகத்தின் காரியாலய மண்டபத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்றது.
இதன் போது கீறல் சஞ்சிகை ஆசிரியர் கவிஞர் அஸீஸ் எம். பாயிஸிடமிருந்து பாத்திம பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் கவிஞருமான சொல்லண்பன் நஸீறுதீன் சஞ்சிகையின் முதல் பிரதியினை பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், பிரதேசத்திலுள்ள மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள். மின்னல் வெளியீட்டகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஒலுவில் மின்னல் வெளியீட்டகமானது பிரதேசத்திலுள்ள வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் கலை கலாசார நிகழ்வுகளை நடாத்துவதிலும் முன்னின்று உழைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
47 minute ago
2 hours ago