2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

உலகம் பாலைவனக் கடையாகும்

Sudharshini   / 2015 ஜனவரி 03 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}



பல்லவி
உலகம் பாலைவனக் கடையாகும்
உன்பங்கதிலோர் குடையாகும்
கடையையுனதாக்கக் காலம் தடையாகும்
வாழ்வு மறுமையை நோக்கிய நடையாகும்

சரணம்
    1.    இன்பம் என்பது ஏமாற்று
        துன்பம் இன்பத்தின் உருமாற்று
        உன் அழகிய உடலொரு கைமாற்று
        நீ அன்பும் அறமும் கொண்டு செயலாற்று        (உலகம்)

    2.    சொல்லாமல் மரணம் இனம் மாற்றும்
        நிலையில்லாத பணமோ குணம் மாற்றும்
        பொல்லாத உறவு பிணமாக்கும்
        அறிவு இல்லாத சூழல் உனை யமனாக்கும்        (உலகம்)

    3.    சொல்லாதே பொய்புறம் தாழ்த்திவிடும்
        செய்யாதே எக்களவும் வீழ்த்திவிடும்
        வையாதே வஞ்சகம் வீழ்த்திவிடும் குறை
        இல்லாத மறையுனை உயர்த்திவிடும்            (உலகம்)

    4.    உள்ளத்தில் நல்லதைக் குடியிருத்து
        நீ தள்ளாதே உண்மையை நிலைநிறுத்து
        சொல்லாதே கோட்செவி நிறுத்திவிடு
        மறை சொல்லாத பாதையை மறுத்துவிடு        (உலகம்)

(ஷெய்ஹூல் முப்லிஹீன்  எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ்)

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X