Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kanagaraj / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லவி
உண்டு உடுத்து உறங்கி விழிக்கும்
உலகம் உண்மை உணருமா
என்றோ ஓர் நாள் இறக்கவேணும்
இதனை உலகம் மறுக்குமா
சரணம்
ஆழ்ந்த உறக்கநிலையில் எங்கே
அமைந்திருந்தாய் அறிவாயா
விழிப்பை பெற்றபின்பும் உலகு
இருப்பதை நீ அறிவாயா
இல்லாப்பொருளோ இருப்பதாகா
இதனை அறிவு ஏற்காதா
இறந்தபின்பும் மறுமைநாளில்
விழிப்பைப் பெறுவாய் மறுப்பாயா
விழிப்பைப் பெறுவாய் மறுப்பாயா
(உண்டு)
உடலால் செய்த உழைப்பின் பலனை
இன்று இங்கே பெறுகிறாய்
உள்ளம் வாழ்ந்த வாழ்வின் பயனை
இறப்பின் பின்பு பெறுகிறாய்
இறைவன் அநீதி இழைப்பதில்லை
உன் இதயம் இதனை உணருமா
நன்மையெனினும் தீமையெனினும்
நாமே பொறுப்பு ஏற்கணும்
நாமே பொறுப்பு ஏற்கணும்
(உண்டு)
ஷெய்ஹூல் முப்லிஹீன் எம். எஸ். ஏம் அப்துல்லாஹ் (றஹ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
16 minute ago
21 minute ago