2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எல்லையை மீறிய பாவியே யாகினும்

Sudharshini   / 2015 மார்ச் 26 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொகையறா
எல்லையை மீறிய பாவியே யாகினும்
இறையருளை மறக்கலாமோ
நன்மையே செய்து நீ நலமாக வாழினும்
இறைநாட்டமெதுவாகுமோ
மனமே மாறாதே கருணையுண்டு
மயங்காதே கலங்காதே
 

பல்லவி
இன்பதுன்பம் எதுவந்தாலும் இதய உறுதி மாறாதே
இறைவன் வகுத்த இயற்கை நியதி என்றுமுலகில் மாறாதே
 

அனுபல்லவி
தரிசு நிலமும் தளிர்த்துச் செழிக்கும்
காலம் ஒன்று மாறுமே
காலம் ஒன்று மாறுமே
நிலைமைமாறும் நேரம் வரலாம்
கலங்கி வாழ்வை இழக்காதே                        (இன்பதுன்பம்)
 

சரணம்

1.  ஆறுபோடும் மடுவும் மேடும்
    அழிந்தொழிவதியற்கையே
    அழிந்தொழிவதியற்கையே
    அறிவு கொண்டு துணிந்து நின்றால்
    அமைதியடைவாயுண்மையே                        (இன்பதுன்பம்)

2;  ஆசையென்ற நோயின் விளைவே
    இன்பதுன்பமாகுமே
    இன்பதுன்பமாகுமே
    அறிவிலாசையடங்கும் போது
    அமைதியடைவாயுண்மையே                        (இன்பதுன்பம்)

3. பண்டைமனிதர் சரித்திரத்தைப்
    படித்துப் பார்த்ததில்லையா
    படித்துப் பார்த்ததில்லையா
    புதமைபுகுதப் பழமை வீழும்
    பயம் தெளிந்து செல்லு நீ                        (இன்பதுன்பம்)

(ஷெய்ஹூல் முப்லிஹீன் எம். எஸ். எம். அப்துல்லாஹ் (றஹ்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .