Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 மே 22 , மு.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவளும் ஒரு புதுமைப்
பத்திரிகை பெண்ணாள் காணீர்!
கணினியின் கருப்பையில் உதித்து
காட்சி தந்தவள் தானே 'தமிழ் Mirror'.
இன்று புதுமையாய் பிறந்துவிட்டாள் பத்திரிகையாய்!
புது மணப் பெண்ணாய் பிறந்துவிட்டாள் இன்று!
நீ 'தமிழ் Mirror' ஒரு புதுமை பெண் என்பேன்.
நீ ஆங்கில அன்னையின் கருவறையில் உதித்தாய்
நீ ஆங்கில அன்னை பெற்ற மகவு ஆதலின்!
ஈழத்தின் பதிப்பு ஊடகத்துறையில்
'தமிழ் Mirror' ஓரு புரட்சி, புதியதோர் ஒழுங்கு!
பத்திரிகை உலகில் ஓரு புத்தெழுச்சி !
புதிய தோற்றம்!, புதியவர்ணம்!, புதிய பார்வை!
புதிய விடயம்!, புதிய வீரம்!, புதிய வடிவமைப்பு!
ஆண்டாண்டு சென்றாலும் விலைபோகாத
பத்திரிகை தர்மம் காத்து 'தமிழ் Mirror' இவளும்
எம்மகள் இளையவளாய்!
எஞ்ஞான்றும் 'தமிழ் Mirror' வாழ்வாங்கு வாழ்ந்திடுவாய்!
-கைதையூரான் கலாநிதி என்.குமரகுருபரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago