Administrator / 2015 ஜூன் 29 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லவி
ஆசையை அளவோடமைத்தவர் வாழ்வில்
ஆனந்தம் சாந்தி அமைந்துவிடும்
அளவினைமீறும் ஆசையைக்கொண்டால்
அரக்கர்குணமே அமைந்துவிடும் - உன்
ஆனந்த வாழ்வை அழித்துவிடும்
ஆண்டவன் சன்னிதி தவறிவிடும்
சரணம்
1. தேவையெனும் நோய் உள்ளத்தில் இருந்தால்
ஆசை அவசியம் வெளியாகும்
அளவினை மீறும் ஆசைகள் அனைத்தும்
அறிவை இருளில் புதைத்துவிடும் - உன்
அன்றாட வாழ்வை நரகாக்கும்
ஆத்ம சாந்திக்கும் ஆசை அவசியம்
அளவறிந்ததனை எடுத்துக்கொள்ளு – நீ
ஆண்டவன் சன்னிதி சேர்ந்திடுவாய்
அருட்கொடைபெற்று மகிழ்ந்திடுவாய் (ஆசையை)
2. உள்ளத்தை உண்மையில் தரிபடுத்து – நீ
உத்தமர் வாழ்வை மேற்கொள்ளு
உலகமே சதமென்று நம்பாதே – அதை
என்றோ ஒரு நாள் இழந்திடுவாய்
என்றோ ஒரு நாள் இழந்திடுவாய்
இணைகொண்ட உள்ளத்தில் ஆசையணையா
ஆசையே நரகில் புகுத்திவிடும் - உன்
அன்றாட வாழ்வும் நரகாக்கும்
ஆகிறா வாழ்வும் நெருப்பாகும் (ஆசையை)
ஷெய்ஹுல் முப்லிஹீன் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் (றஹ்)
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago