2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அடிமட்ட மலையகத்தின் அடிப்படைத் தேவைகள்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக தரித்திரம் தறிகெட்டோட
விரட்ட வந்த எங்கள் தலைமைகளே...
நீங்கள் சரித்திரம் படைக்க
நாங்கள் சலிக்காமல் சறுக்காமல் சரமாரியாக
உமக்கு வாக்களித்தோம்

எங்கள் நூறு வருட வேதனையை
உம்மை நம்பி சாதனையாக்கினோம்.
நாங்கள் வாழப் பிறந்தவர்களில்லையே
பிறந்ததால் வாழத்துடிப்பவர்கள் என்பதை  
மனதில் கொள்ளுங்கள்
 
எங்கள் முகாம் வாழ்க்கையை
முற்று முழுதாக முடிவு கட்டுங்கள்
பளிங்கு பதித்த உங்கள் கழிவறையை விட
நாங்கள் களைப்பாறும் அறையோ
நீள, அகலம், பெறுமதி மிக மிகக் குறைவு
என்பதை கவனத்தில் நிறுத்துங்கள்

மண்ணுக்குள் புதைத்து  தனி வீடு கேட்டு  
இரத்தத்தாலும் கண்ணீராலும் ஒப்பமிட்டு
மாண்ட மலையகத்தானின் ஒப்பந்தத்தை
மிக மிக விரைவில் நடைமுறைப்படுத்துங்கள்

 நாசமாய்ப்; போன  வெள்ளைக்காரன்  நாட்டுக்கு
 சுதந்திரம்  கொடுத்தான்
 எம்மை இக்கருப்பனிடம் அடிமையாக்கி  விட்டு
 எமது விடுதலைக்காக போராடுங்கள் எம்மையும் இணைத்து

தவறணை சாராயத்துக்கும் கள்ளுக்கும்   
புது அனுமதி அளிக்காதீர்கள்
மலையகமெங்கும் தொழிற் பேட்டைகள் வேண்டும்
எங்கள்  இளைய சமூகம் கொழும்பெங்கும்
சீரழிவதை தடுத்திட வேண்டும்
 
எங்கள் உடலை  தேயிலை  செடிக்கும்
இறப்பர் மர அடிக்கும் இனி உரமாக்க முடியாது
பெற்;றுத் தாருங்கள்
இனி மேல் எந்த  தலைவனும்  எந்த கொம்பனும்
எமது  இனத்தை வாடா, போடா என்று  
மரியாதையற்று அழைப்பதோ, நடத்துவதோ
உடனடியாக தடைக்கு வருகிறது கவனத்திற் கொள்ளுங்கள்
 
உங்களுக்காக நாங்கள் வாக்;குகளை வாரியளிக்கிறோம்
சந்தாப் பணத்தையும் சலிக்காமல் கொட்டுகிறோம்
என்பதால், அழமாக சிந்தித்து அழகாக செயற்படுங்கள்

தலமமைகளே, ஐந்தாண்டுகள் இறக்கும் முன்
உமக்கு வாக்களித்த எமக்கு வாழ்வளிக்க
நீங்கள் முயற்சியுங்கள்
உங்கள் புகழும் எம்மோடு இணைந்து வாழும்
 
மலையக தமிழினத்தின் இனிமையிலும் இனிமையான
நல் வாழ்த்துக்கள் உம்மை சேரட்டும்
இறைவன் உமக்கு அருள் புரியட்டும்....

வி.எஸ்.ராஜா                                                          
தெஹியொவிற்ற

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .