Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஜனவரி 27 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்கரையோரம்
அலைகளின் இரைச்சல்
இதமாக இருந்தது காற்று
முத்தங்கள் பரிமாறி
அவளது கரங்களைப்
பற்றியிருந்தேன்
அன்புமொழி பேசினாள்
எல்லாக் கவலைகளும்
மறந்து லயித்திருந்தேன்
பழைய கதைகள்
சொன்னாள்
எனக்கும் கண்கள்
கலங்கின
அவள் கண்கள்
இனியொருபோதும்
கலங்கிடவே கூடாது
உறுதிகொண்டேன்
அவளை மனைவியாக
அடைய
நான் பேறுபெற்றவன்
என்றேன்
அவள் அறிவு ஆளுமை
தைரியம்
எல்லாமும் எனக்குப்
பிடித்தன
இறைவனின் கொடை
என்றேன்
அவளும் உலகை மறந்து
ஐக்கியமாகி இருந்தாள்
எமது திருமணம் பற்றி
அவளையே மறந்து
சொன்னாள்
எனக்கு வேறு
தெரிவுகளுக்கு
அவகாசமில்லை
காலம் என்னை
நிர்ப்பந்தித்தது
அதுதான் உண்மை
என்றாள்
எனக்கு உலகமே இருண்டு
போனது
உயிர் போனவலி
கடற்கரைக்
காற்றுத் தொந்தரவானது
கடல் அலைகளற்றுத்
தெரிந்தது
பிணமாக எழுந்தேன்
வீடு என்ற கல்லறைக்குச்
செல்ல.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago