Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்டாண்டு காலமாய்
மாண்டுபோகும் பரம்பரைதான்
நாமோ? – திடமாய்
சொல்லத் தெரியவில்லை எனக்கு
ஆனாலும்,
நடந்தவற்றை மீள ஒருமுறை
கடந்துபோய்ப் பார்க்கிறேன்
என்னால் இயன்றவரை
சொன்னால்
மிகும் சோகம்
முந்நாள் பார்த்தவற்றை
நினைக்கையிலே
இந்நாள் இக்கவி
என்னால் எழுதுகையில்
நினைத்ததில் தவறில்லை
நாம் அன்றும் இன்றும் என்றும்
மாண்டுகொண்டுதான் இருக்கிறோம்
மரண பூமிதனிலே....
தேர்தல் வரும் - ஆட்சித்
தேர்வும் நடக்கும்
குதிரைகள் பாயும்
கதிரைகள் மாறும்
சிலகாலம் நம் வாழ்வில்
சில்மிசம் அரங்கேறும்
மீண்டும் படிப்படியாய்
மாண்டுபோன நம் பழைய வாழ்வு
ஆண்டுகொள்ளும்
தமிழனின் விடிவுக்கு
அவன் தலைநிமிர்விற்கு
தன்னிகரில்லாப் புகழுக்கு
அடிமை வாழ்விற்கு
நடுநிலை காணத்தான்
எடுப்பார் யார் தேர்தலொன்று...?
அபிவிருத்தி அடையாளம்
வீதியுடன் நிற்கிறது – நம்
பாதுகாப்புகள் யாவும்
பாழடைந்து போகிறது
பெண்ணியம் என்ற பேச்சுக்களும்
கண்ணியம் காத்த காலங்களும்
நேற்றோடு போய்ச்சு
அடுப்பூதி வாழ்ந்த பெண்ணை
அடுக்களையிருந்து களைந்து
மிடுக்காக இவ்வுலகில்
துடிப்புள்ள மலராக்கி
மௌனித்த பாரதி
இன்றிருந்தால் என்ன செய்வான்;?
தன்மானம் காத்துநின்ற
பெண்மானம் இன்று
பெட்டியிலே போகிறது
வான்வெளி எங்கெணும்
வானூர்திகள் வட்டமிட்ட
காலங்கள் கடக்கையிலே
கண்களுக்கு மெலிதாய் ஆனந்தம்
கணப்பொழுதேனும் தரிக்கவில்லை.
வல்லூறுகள் வலைவிரித்து
வல்லுறவு பண்ணும் காலம்
வந்தாச்சு நம் வாழ்வில்
வீட்டுக்கு மறைவாய் போட்ட
முற்றத்து வேலியை
மூடிப்படர்ந்த நச்சுக் கொடியொன்று
ஆடிப்பாடி அசைத்து
வேலியை நாடிப்போட்டது
நித்திலத்தில்
நல்லுறவைப் பிரித்தெடுக்கும்
வல்லறவுப் பேய்களின்
அராஜகம் சொல்லிவிட
சொல்லறவு கொள்ளவில்லை
எனக்கு
சோகங்கள் எம்மை
சேர்ந்தே வாட்டுதே
இன்னும்தான் நாம்
மூலையிலே முடங்கிவிட்டால்
சிலந்தியும் மனையமைக்கும்
எம் மனதோரம்
அணிதிரளும் ஊர்களும்
பவனியாய் ஊர்வலங்களும்
பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய்
கண்டனப் பேருரைகளும்
பகிஷ்கரிப்பு கடையடைப்பு
இவை மட்டுமல்ல நம் பலம்
இன்னுமின்னும் எழுவோம்
நாம் எல்லோரும்
அறிவாய்
நேற்று கிருஷாந்தி
இன்று வித்தியா
நாளை உதிரப்போகும்
நறுமலரைக்காக்கவென
தோள்கொடுக்க வாரீர் - நம்
தோழமைகளே
பெண்ணியம் காக்க புறப்படுவோம்
உதிர்ந்த பூக்களின்
உதிரம் சாட்சியாய்
-மல்லாவி கஜன்
ஜேய்.எம். அக்ரம் Wednesday, 27 April 2016 02:51 AM
வாய்ப்புகளை தந்தமைக்கு நன்றி மல்லாவி கஜன் இது சங்கக் கவி இது ஒரு சந்தக் கவி இது உன் சொந்தக் கவி சொன்னால் சோகம் முன்னாள் எனும் வரி எனை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்து - நன்றி -
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago