2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1000 குழிகளைத் தோண்டிய ஜனாசா நலன்புரி அமைப்பு

Freelancer   / 2022 நவம்பர் 24 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

காத்தான்குடியில் 2013 ஆம் ஆண்டு தொடங்கிய ஜனாசா நலன்புரி அமைப்பால் கப்று வெட்டுதல், ஜனாசாவுக்கான கபன் துணி வழங்குதல், ஜனாசாக்களை வைத்தியசாலைகளில் இருந்து வாகனத்தில் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுத்தல்  போன்ற காத்திரமான மனிதநேயப் பணிகள், ஒரு ரூபாயேனும் கூலியாகப்ட பெறாமல் இலவசமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பணியின் ஓர் அங்கமாக ஆயிரமாவது குழி (கப்ர்) செவ்வாய்க்கிழமை இரவு (22), காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மைய வாடியில் தோண்டப்பட்டது.

காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய், 19ஆம் வட்டாரம் ஆகிய பிரதேசங்களில், காத்தான்குடி ஜனாசா நலன்புரி அமைப்பின்  பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .