R.Tharaniya / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பெரிய காளை கோட்டை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (16) அன்று முற்றுகையிட்ட பொலிஸாரை கண்டு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓட்டம் வாய்காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பரல்கள் கொண்ட 3400 லீற்றர் கோடாவை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வயல் பகுதியை அண்டிய வாய்க்காலில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்
பொலிஸாரை கண்டு உற்பத்தியில்; ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதையடுத்து வாய்க்கால் நீரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடாவுடனான 17 பரல்களை மீட்டு கோடாவை அங்கு ஊற்றி அழித்து பரல்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராசா சரவணன்
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025