2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

18 இலட்சம் மில்லி லீற்றர் கோடா போதை பொருள் பறிமுதல்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரிவிற்குட்பட்ட நரிப்புலித்தோட்டம் வாவியில் நீருக்கடியில் சூட்சுமமான முறையில்10 பரல்களில் 18 இலட்சம் மில்லி லீற்றர் கோடா போதை பொருளை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயித்தியமலை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே எம் இக்பால் தெரிவித்தார் 

இப் பிரதேசத்தில் கோடா போதை பொருள் உற்பத்தி அதிகரித்திருப்பதை தொடர்ந்து பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் வௌ்ளிக்கிழமை (03) அன்று மாலை சுற்றிவளைத்த ஆயத்தியமலை பொலிஸார்  குறித்த கோடா பரல்களை கைப்பற்றியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்திருப்பதை தொடர்ந்து பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த கோடா பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன 

சந்தேக நபர்கள்  தப்பியோடிள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட கோடா பரள்களை ஏறாவூர்  சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்ஸபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X