R.Tharaniya / 2025 நவம்பர் 16 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் அடங்கிய 3 பரல்கள் கைப்பற்றப்பட்டன. அதிலிருந்து 1900 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டது.
அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் எடுத்து வந்தவர்.
சனிக்கிழமை (15) அன்று கைது செய்யப்பட்டார். மட்டு காந்தி பூங்காவுக்கு முன்னாள் வீதியில் வைத்து மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டார் என மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.
மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களுக்கு கிடைக்க பெற்ற தகவலை அங்கு காத்திருந்த மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களான எம்.தேவநேசன், என்.விமலசேன ஆகியோர் குறித்த வாகனத்தை மடக்கி பிடித்தனர்.
கைப்பற்றப்பட்ட வாகனத்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பகுதியில் உள்ள மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்கள் பணிமனைக்கு கொண்டு சென்று அங்கு பரிசோதனை செய்த போது அது மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் இருப்பது என கண்டறியப்பட்டது
அனுராதபுரம் பகுதியில் உள்ள உல்லாச விடுதிகளில் சமையலுக்கு பாவித்த எண்ணெயை பெற்று அதில் கொத்தமல்லி மற்றும் புதிய தேங்காய் எண்ணெயை கலப்படம் செய்து புதிய தேங்காய் எண்ணெயைப் போல நிறத்துக்கு மாற்றி அதனை புதிய எண்ணெயாக்கி விற்பனை செய்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.


கனகராசா சரவணன்
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025