2025 ஜூலை 03, வியாழக்கிழமை

3 களஞ்சியசாலைகளுக்கு சீல்

Niroshini   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

 

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 4,5000 தொன் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு, இன்று (07) சீல் வைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால், நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மூன்று நெல் களஞ்சியசாலைகளில் 4,5000 தொன் நெல்மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து, இந்த மூன்று நெல் களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை பணிப்பாளர் கே.டி வசந்தன் தெரிவித்தார்.

பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .