Janu / 2023 ஜூலை 19 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் தனியார் வாகனதரிப்பிடத்தில் தீ ஏற்பட்டதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 30 மோட்டர் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் தீயில் எரிந்து முற்றாக சேதமடைந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(18) மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்
வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு,வாகரை போன்ற பிரதேசங்களுக்கு வேலை மற்றும் வைத்தியசாலை உட்பட பல தேவைகளுக்காக தமது வீடுகளில் இருந்து பிரதான வீதியிலுள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்திற்கு மோட்டர்சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பிரயாணித்து அதனை அந்த பகுதியிலுள்ள தனியார் வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தமது பிரயாணத்தை மேற்கொண்டுவருவது வழமை
இந்த நிலையில், சம்பவதினமான காலையில் வாகன தரிப்பிடத்தில் தமது மோட்டார் சைக்கிள் மற்றம் துவிச்சக்கரவண்டிகளை வழமைபோல நிறுத்திவிட்டு செல்வர். வாகனதரிப்பிட காவலர் அன்று மாலையில் அங்கிருந்த குப்பைகளை கூட்டி தீவைத்துள்ளார்.
அந்தத் தீ திடீரென அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் பரவியதையடுத்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில், வாகன தரிப்பிட கொட்டகை, 30 மோட்டர் சைக்கிள்கள் 27 துவிச்சக்கரவண்டிகள் உட்பட அனைத்தும் முற்றாக எரிந்து சாம்பலாகியது
அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள், பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தனர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago