2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது

R.Tharaniya   / 2025 ஜூலை 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப் பரிசில்களையும் கெளரவத்தையும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஞாயிற்றுக்கிழமை (27) அன்று வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 36 மில்லியன் ரூபா நிதியிலான பணப் பரிசிக்களும் மற்றும் கெளரவம் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .