2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

95,000 மில்லி லீற்றர் கசிப்புடன் 30 பேர் கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ. எல் ஜவ்பர்கான்

சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்புடன் 30 பேர் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் 

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா, புதுக்குடியிருப்பு ,கிரான்குளம், நாவற்குடா, மற்றும் கல்லடி உட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் நடத்திய திடீர்  சுத்தி வளைப்புகளின்போதே  போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 95,000 மில்லி லீற்றர் கசிப்பும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது 

கைது செய்யப்பட்ட நபர்கள்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .