Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 09 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தபால் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரைவான வெளிநாட்டு தபால் பொதி சேவை ((EMS) தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெளிவூட்டும் ஊர்வலம் சனிக்கிழமை (08) நடைபெற்றது
மட்டக்களப்பு மாவட்ட தபால் அத்தியட்சகர் எஸ்.ஜெகன் தலைமையில் பிரதம தபால் அத்தியட்சகராக எம்.ஜெயரெட்னத்தனின் வழிகாட்டலின் வெளிநாட்டு தபால் பொதி சேவை தொடர்பான அறிமுக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிரதம தபாலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகச் மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை சென்று பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி புதிய வெளிநாட்டு தபால் பொதி சேவை தொடர்பான தகவல்களை வழங்கினர்.
இருநூறு வருடங்களுக்கும் மேலாக தபால் சேவைலயினை வழங்கி வரும் இலங்கைத் தபால் திணைக்களமானது தமது சேவையின் நவீனத்துவத்தைக் கருத்தில் கொண்டு பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விரைவான வெளிநாட்டு தபால் பொதி சேவையினை ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 தபாலகங்களிலும் 66 உப தபாலகங்களிலும் இச் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பேரின்பராஜா சபேஷ்
17 minute ago
29 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
8 hours ago