Editorial / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
இலங்கை இராணுவத்தினர் International campus of Science and Technology (ICST) பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் ஒரு பகுதியான சிரமதானத்தை முன்னெடுத்தனர்.
புணானை தொடக்கம் நாவலடி வரையிலான சுமார் 16 கிலோமீட்டர் வரையிலான பாதையின் இரண்டு பக்கங்களையும் துப்புரவு பணிகளில் வியாழக்கிழமை(25) ஈடுபட்டனர்.
குறித்த பிரதான போக்குவரத்து மார்க்கத்தைப் பயன்படுத்துவோர் வீதியின் இருமருங்கிலும், குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என இதன் போது ராணுவத்தின் கிழக்கு கட்டளை தளபதி தெரிவித்தார்.
குப்பைகூழங்களை இப்பாதையை பயன்படுத்துவோர் வீசுவதனால் இப்பாதையில் வனவிலங்குகள் அவற்றை சாப்பிட வருவதனாலும், குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசி இப்பாதையை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் பல்வேறு அசௌகரியங்களையும் உயிர் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இதை தவிர்க்கும் முகமாக இலங்கை ராணுவத்தின் கிழக்கு கட்டளை தளபதியின் மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டப்ளியு.பல்லே கும்பர,மேஜர் ஜெனரல் ஜி.பி.பி.குலத்திலக்க, மற்றும் ICST பல்கலைக்கழகத்தின் தலைவர் எம்.எச்.ஏ ஹீராஸ் ICST உபவேந்தர் சிரியானி விக்ரமசிங்க, பதிவாளர் பீ.டி.ஏ ஹசன், பிரதேச சபை உறுப்பினர் தாஹிர், மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவைப் பிரிவின் பிரத்தியேக ஆலோசகர் ஏ.எஸ்.எம் சதீக், மாணவர்கள், இராணுவத்தினர் என பலரும் இதன்போது பங்கேற்று துப்புரவு பணிகளை முன்னெடுத்திருந்தனர்.








1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago