R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்க கோரியும்; அரச வங்கி ஊழியர்களின் ஒன்றினைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (12) அன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பே. கவாஸ்கரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகியது இதில் கலந்து கொண்ட அரச வங்கி ஊழியர்கள் 1996 இற்கு பின்னைய ஓய்வூதிய கொடுப்பு முறையின் உத்தேச திருத்தங்களை உடன் செயல்படுத்துக, அரச வங்கிகளின் ஊழியர் உரிமைகள் கத்தரிப்பதற்கு எதிராக அணிதிரள்வோம், ஓய்வூதிய கொடுப்பனவு முறை இல்லாத அரச வங்கிகளில் அந்த உரிமைகளை உடன் நிறுத்துக,
எச்.டி.எப்.சி. மற்றும் எஸ்.எம்.ஜ.பி வங்கிகளின் பிரச்சனைகளை உடன் தீர்க்க, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30 நிமிடம் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்கார்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.




3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago