Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில் வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை இரத்து செய்ய கோரி கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் குழுவினர் அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை புதன்கிழமை (14) மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அம்பாறை கச்சேரியில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு வருகை தந்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரை போராட்டக்காரர்கள் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை கூறி மகஜர் ஒன்றினை வழங்கி வைத்துள்ளனர்.
குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய விடயத்தை எடுத்து சென்று நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
பாறுக் ஷிஹான்
14 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago