2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ஆயுர்வேத மத்திய மருந்தக திறந்து வைப்பு

Janu   / 2023 ஜூலை 13 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபு அலா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், மாகாண விஷேட செயற்பாடுகளுக்காக குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடையில் (PSDG) ரூபா. 13 மில்லியன் செலவில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மேற்பார்வையோடு   மட்டக்களப்பு  திக்கோடை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் புதன்கிழமை  (12)  இடம்பெற்ற  இவ்விழாவுக்கு  கிழக்கு  மாகாண ஆளுநர் எம்.செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த  ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .