Janu / 2026 ஏப்ரல் 28 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் இரவு நேர உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களை (Taste Centers) இலக்கு வைத்து, திங்கட்கிழமை (27) அன்று விசேட சுகாதார சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்நடவடிக்கையானது நான்கு விசேட குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மொத்தமாக 42 உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த சோதனைகளின் போது, சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டமை, அசுத்தமான முறையில் உணவுகளை தயாரித்தமை மற்றும் கையாண்டமை போன்ற குறைபாடுகள் காணப்பட்ட சில உணவகங்கள் அடையாளம் காணப்பட்டன. அத்தகைய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்தச் சோதனையில்; மாவட்ட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர், உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் மற்றும் சம்மாந்துறை பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
“பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இத்தகைய திடீர் சோதனைகள் வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்,” என சம்மாந்துறை மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் எம்.என்.எம். பைலான் இதன்போது தெரிவித்தார்.
நூருல் ஹுதா உமர்

37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago