Editorial / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான ராணுவ முகாம் அமைந்திருந்த காணி பல தசாப்தங்களுக்கு பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டு சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது அங்குள்ள கட்டிடத்தினை தற்காலிக மதிப்பீடொன்றினை பெற்று அதனடிப்படையில் கேள்விகள் கோரப்பட்டு கட்டிடத்தை வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை தீர்மானித்துள்ளது.
காரைதீவு பிரதேச சபையின் 04 வது சபையின் 05 வது மாதாந்த சபைக் கூட்டம் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போதே இந்த தீர்மானம் சபையோரால் நிறைவேற்றப்பட்டது. மேலும், கடந்த சபைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 08 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
அத்துடன் 2025ம் ஆண்டில் கிடைக்கப் பெற்ற மேலதிக பெறுவனவுகளுக்காக தயாரிக்கப்பட்ட குறைநிரப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டதுடன் வீதி விளக்குகளை இயக்கம் செய்வதற்கான கடமையில் ஈடுபடுத்தப்படும் நபர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை சபை நிதியிலிருந்து வழங்குவதற்கு சபை அனுமதி பெறப்பட்டது.
மேலும் மாளிகைக்காடு உப நூலகத்திற்கு புதிதாக வழங்கப்பட்ட புத்தகங்களை பாதுகாப்பாக அலுமாரி ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், மாவடி பள்ளியில் புதிதாக இரண்டு இறைச்சிக் கடைகளை நடத்துவதற்கும் பதிலீட்டு அடிப்படையில் கடமையாற்றிவரும் ஊழியரின் சேவைக்காலத்தினை மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்காக உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதியைபெற்றுக் கொள்ளவும் சபையின் அனுமதி பெறப்பட்டது.
சபையின் செயலாளராக கடமையாற்றும் அ.சுந்தரகுமார் விரைவில் ஓய்வு பெற்றுச் செல்ல உள்ளதாலும், ஓய்வுக்கான முன் விடுமுறை கோரி விண்ணப்பித்துள்ளமையால் பதில் செயலாளராக திருமதி வனிதா டேவிட் அமிர்தலிங்கம் என்பவரை நியமிப்பதற்கு சபை அனுமதி வழங்கியது. இதன்போது உறுப்பினர்கள் பலரும் பல்வேறுபட்ட மக்களின் பிரச்சினைகளை சபைக்கு முன்வைத்து உரையாற்றினர்.
4 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago