2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இலட்சக்கணக்கான மீன்கள் கரையொதுங்கின

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு 

அம்பாறை, திருக்கோவில் பிரதேச கடற்கரையில் இறந்த நிலையில் இலட்சக் கணக்கான மீன்கள், இன்று (23) கரையொதுங்கின.

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலுக்கு முன்னாலுள்ள கடற்கரையில் இவ்வாறு களப்பு இன மீன்கள் அதிகளவில் கரையொதுங்கியுள்ளதுடன், அவை அனைத்தும் இறந்த நிலையில் அழுகிக் காணப்படுகின்றன.

இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, மீனவர்களும் பொதுமக்களும் வருகைதந்து வியப்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

அத்துடன், சம்பவ இடத்துக்கு திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், பிரதேச உதவிச் செயலாளர் கே.சதிசேகரன், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் இ.வி.கமலராஜன், மீன்பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட பலரும் வருகை தந்தது, நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.

இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்களை, நாய்கள் மற்றும் காகங்கள் தூக்கிச் செல்வதுடன், அப்பிரதேசத்தில் தூர்நாற்றம் வீசி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், மீன்களை, திருக்கோவில் பிரதேச சபையின் உதவியுடன் உடனடியாக அகற்றி, பிரதேசத்தை சுத்தப்படுத்தும் வகையில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ஆகியோர் துரித நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கரையொதுங்கிய மீன்கள் சுமார் 1,000 கிலோகிராமுக்கும் அதிகமாகக் காணப்படுவதுடன், இவற்றின் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் இருக்கலாமென திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X