2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

உக்கிரமடையும் கடலரிப்பு

Freelancer   / 2023 ஜூலை 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பிரதேசத்தில் மீண்டும் உக்கிரமடைந்துள்ள கடலரிப்பினால் பீச் பார்க் (கடற்கரைப் பூங்கா) கிழக்குப் பகுதி சுற்றுமதில் வீழ்த்தப்பட்டிருப்பதுடன் மீனவர் நூலக கட்டிடமும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ள கடலரிப்பு காரணமாக பீச் பார்க்கின் பெரும்பகுதி கடலுக்கு இரையாகக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த பீச் பார்க்கிற்கு கிழக்குப் புறமாக இருந்த கடற்கரை நிலப்பகுதி கடலால் முற்றாக காவு கொள்ளப்பட்டிருக்கிறது. மக்கள் ஓய்வு, பொழுது போக்கிற்காக கூடுகின்ற இக்கடற்கரைப் பகுதியின் இழப்பு ஈடுசெய்ய முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏ.எம்.அஸ்லம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .