2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

உணவகங்களில் திடீர் பரி​சோதனை

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமில்லாத உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யும் 20 விற்பனை நிலையங்கள் விடுவர் சுற்றிவளைப்பு 12 வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை 

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி ஆகிய பகுதிகளில்  நேற்று   மாலை (16) சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது மனித நுகர்விற்கு பொருத்தமில்லாத உணவுப் பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யும்  20  உணவகங்கள், வீதியோர உணவு விற்பனை நிலையங்கள்,திடீர் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் (fast food) உணவகங்கள் சுகாதார அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர் முரளீஸ்வரனின்  பணிப்புரையின் பேரில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நஸீர்தீனின் வழிகாட்டலில்குறித்த வர்த்தக நிலையங்கள் திடீரென சுற்றி வளைக்கப்பட்டன.மேர்பார்வை  பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏ.எம்.பஸீர் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டு பரிசோதனை நடாத்தினர்.

இதன் போது மனித தூரத்திற்கு பொருத்தமில்லாத,காலாவதியான,லேபல் ஒட்டப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன்,மருத்துவச் சான்றிதழ் இன்றி கடமை புரிந்த அதிகளவிலான ஊழியர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இதன்போது 12 வர்த்தகர்கள் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதர் பஸீர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் வாராவாரம் இவ்வாறான சுற்றி வளைப்பது தேடுதல்கள் தொடரும் என சுகாதார பகுதியினய் மேலும் தெரிவித்தனர்.

ரீ.எல்.ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X