2024 மே 02, வியாழக்கிழமை

உணவு கையாள்பவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் அவசியம்

Freelancer   / 2023 ஜனவரி 25 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் ஹனீபா

அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள உணவகங்களில் உணவு கையாள்பவர்கள், உரிய மருத்துவ சான்றிதழைத் தன்வசம் வைத்திருத்தல் அவசியமென, அக்கரைப்பற்று சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் எம்.எப்.ஏ  காதர் நேற்று (24) தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த சுகாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உணவகங்கள், உணவு கையாழும் நிலையங்கள், பேக்கரிகள் போன்றவை பரிசோதிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வும் தரச்சான்றிதழ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

பரிசோதனையின் போது, பாவனைக்குதவாத உணவுப் பண்டங்கள், பொருட்கள், காலவதியான பொருட்கள் என்பன கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அதன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், குறித்த உணவகங்களும் உணவு கையாளும் நிலையங்களும் மூடப்படுமெனவும் தெரிவித்தார்.

உணவு தயாரிப்போர், உணவு விநியோகிக்கும் இடம், பயன்படுத்தும் உபகரணம் போன்றவற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும், உணவகங்களில் பணியாற்றுபவர்கள் கையுறை பாவிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .