2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

“உயிருக்கு அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்க மாட்டேன்”

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கையால் வியாபார சான்றிதழை பெறாத நிறுவனங்களை, வியாழக்கிழமை (18) மூட வைத்துள்ளார்.

வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதி கூடிய வட்டியை வீதத்தை மக்களிடமிருந்து வசூலிக்கும் நிதி நிறுவனங்கள், என்பன இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அதிரடியாக பூட்டப்பட்டன.
 
பிரதேச சபை தவிசாளருக்கும், இந்த நிதி நிறுவனங்களுக்கு இடையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வைத்து இரு தடவைகள் கலந்துரையாடப்பட்டன.

 நுண் நிதிக் கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன், நடைபெற்ற கலந்துரையாடலின் வியாபார சான்றிதழ் மற்றும், அதிகூடிய வீதத்தை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் பூட்டப்படும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதற்கிணங்க தவிசாளரினால் நேரடியாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், “என் உயிருக்கு என்ன அச்சுறுத்தல் வந்தாலும் நான் தயங்கமாட்டேன், மக்களுக்கு அதிக வட்டி வீதத்தை வசூலிக்கும் நிதி நிறுவனங்களையும், எமது பிரதேச சபையில் வியாபாரச் சான்றிதழ் பெறாத அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும் என  தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.

வ.சக்தி     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X