Janu / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம் மாடியில் இருந்து அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் புதன்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனவும் கடந்த 15 நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வீட்டின் 2 ஆம் மாடியில் குறித்த நபர் சடலமாக கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்ட அவர் சகோதரி ஒருவரின் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காணாமல் சென்றிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
பாறுக் ஷிஹான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .