R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக பழங்குடிகள் தின நிகழ்வு மூதூர் சந்தன வெட்டை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (05) அன்று இடம் பெற்றது. திருகோணமலை குவேனி பழங்குடி மக்கள் நலன்புரி அமைப்பு ,சிவில் அமையம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
"இலங்கையின் கரையோர பழங்குடி மக்களின் உரிமைகளை நிலை நாட்ட ஒன்றிணைவோம் " எனும் தொனிப்பொருளில் கீழ் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில் பழங்குடி சமூக பாரம் பரிய பூஜை இடம்பெற்றன. அத்தோடு பழங்குடி சமூகத்திலிருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் காட்டுக்கு தேன் எடுக்க செல்வோருக்கு அரச அனுமதியுடன் அடையாள அட்டையும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. அதே வேளை தேன்,குளத்து மீன் கருவாடு, பழங்குடியினர் உணவான வள்ளிக்கிழங்கு, அல்லைக்கிழங்கு என்பன நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினருக்கு சிற்றுண்டி உணவாக பகிரப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு பழங்குடி அமைப்பின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் ,திருகோணமலை குவேனி பழங்குடி அமைப்பின் தலைவர் நடராசாகனகரெட்ணம் ,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் பேராசிரியர் சி.ஜெய்சங்கர்,திருகோணமலை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் சோ.லதா மங்கேஷ், மூதூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி தாமரை மனாலன் லலிதா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago