2026 ஜனவரி 31, சனிக்கிழமை

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் வாகரையில் 4 பேர் கைது

Editorial   / 2026 ஜனவரி 30 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}



 கனகராசா சரவணன்

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்டவிரோதமாக  உள்ளூரில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கிகளுடன் 4 பேரை  வியாழக்கிழமை (29) அன்று விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து குறித்த பிரதேசத்தில்   வாகரை விசேட அதிரடிப்படை  முகாம் பொறுப்பதிகாரி பி.பி.அமில தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தினர்.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் 4 மீட்டதுடன் 32, 48, 28 மற்றும் 42 வயதுடைய  நான்கு பேரை கைது செய்தனர் இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வன விலங்குகளை இறைச்சிக்காக துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி வருபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.    
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X