2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

ஊடக ஆர்வலர்களுக்கான ஆலோசனை

Freelancer   / 2022 நவம்பர் 08 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்

ஊடக ஆர்வலர்களுக்கான ஆலோசனையும் வழங்கும் நிகழ்வும், மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பும் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை  நகரசபை பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று  எழுத்தாணி கலைப் பேரவையின் நெறிப்படுத்தலில் தலைவர் வ .ராஜ்குமார் தலைமையில் ஊடகவியலாளர்களுக்கான சீருடை வழங்கி வைக்கப்பட்டதுடன், எதிர்கால சேவை முன்னெடுப்பு தொர்பான ஆலோசனையும் வழங்கப்பட்டது.
                                                    
அத்துடன், மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் வே.தங்கராசாவின் சேவை நலன் பாராட்டி கௌரவிக்கப்பட்டது

 இந்நிகழ்வில் மூத்த, இளம் ஊடகவியலாளர்கள், ஊடக கற்கை மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .