2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எண்ணெய் பரல்களை கடத்தியவர் கைது

Editorial   / 2025 மார்ச் 14 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பாறுக் ஷிஹான்

கடை ஒன்றின் முன்பாக  வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வியாழக்கிழமை (13) அதிகாலை எண்ணெய் பரல்கள் களவாடப்பட்டுள்ளதாகப் அதன் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் வழிகாட்டலில் செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்   பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமையிலான பொலிஸார் விரைந்து செயல்பட்டு மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதிக்கு களவாடி எடுத்துச் செல்லப்பட்ட பரல்கள் உட்பட வாகனம் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதானார்.

தப்பிச் சென்றுள்ள இரு சந்தேக நபர்களையும் சிசிடிவி காணொளிகள் மற்றும் ஏனைய தகவல்களின் ஊடாக  பொலிஸார் விசேட தேடுதல் மேற்கொண்டு கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று  சந்தேக நபர் உட்பட களவாடப்பட்ட பொருட்கள் வாகனங்கள் சுமார் 7 மணித்தியாலங்களில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதே வேளை களவாடப்பட்ட குறித்த பொருட்களை உடமையில் வைத்திருந்த  சந்தேக நபரும்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்  குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 22 வயதுடைய  சந்தேக நபர் மற்றும் ஏறாவூர் மற்றும் செங்கலடி பகுதியில்  மீட்கப்பட்ட சான்று பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்கு  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X