2026 மே 21, வியாழக்கிழமை

ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு

Editorial   / 2026 மே 20 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

துருப்பிடித்த நிலையில் மண்ணில் புதைந்திருந்த ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகளும் இன்று மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள், கடந்த யுத்த காலத்தில் பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் இக்குண்டுகள் மீட்கப்பட்ட பகுதியானது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாகக் காணப்பட்டதுடன், அங்கிருந்து இராணுவ முகாம்களை நோக்கி மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மீட்கப்பட்டுள்ள குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், மீட்கப்பட்ட குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படைப் பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X