Editorial / 2025 நவம்பர் 03 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை முற்றுகையிட்ட பொலிஸார் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் 24 போத்தல் கசிப்புடன் ஒருவர் உட்பட இருவரை ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான பொலிஸார் சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (02) இரவு கருவப்பங்கேணி பகுதியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபல போதைப்பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது 34 வயதுடைய பிரபல வியாபாரியை 5 கிராம் 650 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்த போது அங்கு பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து கைது செய்தவரை கொண்டு செல்ல விடாது பொலிஸாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை அங்கிருந்த பொலிஸார் மீட்டெடுத்து கொண்டு சென்றனர்.
அதேவேளை திருப்பெருந்துறையை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட போது அங்கு கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபாரியை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் மற்றும் கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago