2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஐஸ் போதை பொருளுடன் முவர் கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 3 வியாபாரிகளை ஞாயிற்றுக்கிழமை (6) அன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ்.ஆபிதீன் தலைமையில் பொலிஸ் பரிசோதகர் அநுர, பொலிஸ் கொஸ்தாப்பரர்களான முனசிங்க, மென்டிஸ், சியாம், மானவடு, குமார, என்நாயக்கா கொண்ட குழுவினர்; சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (6) அன்று பகல் அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போதை பெருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மாறுவேடத்தில் இருந்த பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்து  சோதனையிட்ட போது 84 கிராம் 620 மில்லிக்கிராம் மற்றும் 31 கிராம் 50 மில்லிக்கிராம் மற்றும் 24 கிராம் 94 மில்லிக்கிராம் ஆக 140 கிராம் ஐஸ் போதைப் பொருளை 3 பேரிடமிருந்து மீட்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

இதில் 84 கிராம் 620 மில்லிக்கிராமுடன்  கைது செய்யப்பட்ட 40 வயதுடையவர் 2007ம் ஆண்டு குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாத இதையடுத்து நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 40,36,40 வயதுடைய மூன்று பேரும் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதையடுத்து  இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .