2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

ஐஸ் போதைப் பொருளுடன் நால்வர் கைது

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புறநகர் பகுதியில் சனிக்கிழமை (16) அன்று ஐஸ் போதைப்பொருளுடன் 04   சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரின் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 40, 24 ,21 ,30 ,வயது சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டதுடன்  அவர்களிடம் இருந்து 5 கிராம் 10 மில்லிகிராம்,  1 கிராம் 50 மில்லிகிராம் ,  1 கிராம் 10 மில்லி கிராம் , 1 கிராம் 950 மில்லிகிராம், என ஐஸ்போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கைதானவர்கள் சென்னல் கிராமம் 02  மலையடிக்கிராமம் 01  காரைதீவு 06  மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கைதான இச்சந்தேக நபர்களில் 30 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபரும் உள்ளடங்குகின்றார்.

மேலும் சந்தேக நபர்கள் உட்பட சான்றுப் பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த  நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பொலிஸ்அத்தியட்சகர் டி.பி.எச்.கலனசிறியின் மேற்பார்வையில்  அம்பாறை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 சம்பத்விக்கிரமரத்ன வின் கட்டளையின் பிரகாரம்  அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுபொறுப்பதிகாரி கே.ஏ.எம்.பிரியங்கரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X