Janu / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று பனங்காடு மகாசக்தி கிராமம் பகுதியில் வைத்து 38 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை திங்கட்கிழமை (21) திருக்கோவில் விசேஷ அதிரடி படையினர் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பாரியளவிலான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதன் காரணமாக அவரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியோடு அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (21) " வி" அறிக்கையினை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கல் செய்திருந்தார்.
அவ்வழக்கானது விசாரணைக்கெடுத்துக் கொள்ளப்பட்ட போது, அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி சந்தேக நபரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கியதோடு, 72 மணித்தியாலங்கள் முடிந்தவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.
வி.ரி.சகாதேவராஜா
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago