2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஓட்டமாவடியில் இரு இடங்களில் தீப்பரவல்

R.Tharaniya   / 2025 ஜூன் 16 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை (15) அன்று மாலை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள காணி மற்றும் புகையிரதம் செல்லும் ஓட்டமாவடி பழைய பாலத்தின் புகையிரதப் பாதை ஆகியவைகளில் தீப்பரவல் ஏற்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள காணியில் குப்பைகளுக்கு தீ வைக்கும் போது அங்கு தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை, ஓட்டமாவடி பழைய பாலம் புகையிரத வண்டி மாத்திரம் செல்லுவதற்கு பயன்படுத்தப்படும் பாதையாகும் அந்த பாலத்தினூடாக வேறு வாகனங்கள், பாதசாரிகள் எவரும் பயணிக்காத நிலையில் மர்மமான முறையில் தீ பிடித்துள்ளது.

இரு இடங்களிலும் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர், பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.அமீர் (சமீம்) வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் ஆகியோர் வருகை தந்து தீ பரவியதற்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X