Janu / 2025 ஜூன் 18 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆற்றோரத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த கசிப்பு தயாரிப்பு நிலையம் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் கசிப்பு தயாரிப்பு தொடர்பாக ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (17) அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது கசிப்பு 200 லீற்றர், 2 இரும்பு பரல், செப்பு குழாய் ,1 கேஸ் அடுப்பு , 4 அடி நீளமுடைய ரப்பர் குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்த சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்

5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago