Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 30 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் திங்கட்கிழமை (30) அன்று பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றின் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து சம்பவம் குறித்து தெரியவருவதாவது கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரம் இருந்த வம்மி மரத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர் களாகும். விபத்தில் பேருந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
29 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
47 minute ago
2 hours ago