Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ.எச்
சீரற்ற கால நிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.
தம்பலகாமம் பிரதேச கோயிலடியை அண்டிய வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.
ஓரிரு நாட்கள் பெய்த தொடர்ச்சியான கனமழை காரணமாக நெற் செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
திட்வா புயல் காரணமாக வெள்ள நீரின் அளவு அதிகரிப்பினாலும் பல வயல் நிலங்கள் அழிவுற்ற நிலையில் .இயல்பு நிலை திரும்பி மீண்டும் தற்போது வெள்ள நீரில் மூழ்கியதால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
இதனால் தம்பலகாமம் சம்மாந்துரைவெளி,பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவணம் செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
5 minute ago
20 minute ago
29 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
29 minute ago
37 minute ago